1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (15:14 IST)

விண்ணுக்கு செல்லும் ரோபோ மித்ரா..!

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னொட்டம் ”மித்ரா” பெயரிடப்பட்ட ரோபோ ஒன்றை தயாரித்து விண்ணுக்கு அனுப்பவுள்ளது இஸ்ரோ

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, விண்ணுக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் முன்னோட்டமாக ”மித்ரா” என்னும் பெண் ரோபோவை விண்ணுக்கு அனுப்பவுள்ளது. இந்த ரோபோ விண்வெளியில் ஏற்படும் பிரச்சனைகளை உடனுக்குடன் உணர்ந்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரோபோவை ககன்யா திட்ட கருத்தரங்கில் இஸ்ரோ சிவன் அறிமுகம் செய்து வைத்தார்.