செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (13:50 IST)

”நமக்கு தேவை சிலை அல்ல; வேலை தான்..” பாஜகவை வெளுத்து வாங்கும் பிரகாஷ் ராஜ்

தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயாரிப்பதை விட்டுவிட்டு வேலையின்றி தவிக்கும் இளைஞர்களின் பட்டியலை தயார் செய்யலாம் என பாஜகவை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ”இந்த தேசத்திற்கு தேவை 3000 கோடி சிலை அல்ல. தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயார் செய்வதை விட வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் மற்றும் அடிப்படை கல்வியறிவு கூட பெறாத குழந்தைகளின் பட்டியலை தயார் செய்யவேண்டும்” என பாஜகவை விமர்சித்துள்ளார்.

மேலும் “போராட்டக்காரர்கள் மீது அரசு வன்முறையை ஏவினாலும், போராட்டக்காரர்கள் வன்முறையினை தவிர்த்து அறவழியில் போராட வேண்டும்” என பிரகாஷ் ராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.