செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 22 ஜனவரி 2020 (17:35 IST)

நித்யானந்தாவை தேட ப்ளூ கார்னர் நோட்டீஸ்.. இண்டர்போல் அதிரடி

குஜராத் போலீஸாரின் கோரிக்கையை ஏற்று நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல்

நித்யானந்தா மீது பாலியல் வழக்கு, குழந்தை கடத்தல் ஆகிய வழக்குகள் உள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலை அறியமுடியாத நிலையில், இணையத்தில் பல ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து குஜராத் போலீஸார் நித்யாந்தாவிற்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடவேண்டும் என சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போலுக்கு கோரிக்கை வைத்த நிலையில் அதனை ஏற்று நித்யானந்தாவிற்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது இண்டர்போல். தலைமறைவாகியுள்ள நபரை கண்டால் தகவல் அளிப்பதே ப்ளூ கார்னர் நோட்டீஸ் எனப்படும்.