செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 மே 2022 (16:59 IST)

ஆளுனருக்கு பதில் இனி முதல்வரே துணை வேந்தர்! – மேற்கு வங்க அரசு முடிவு!

Mamata Banerjee
மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைகழகங்களில் ஆளுனருக்கு பதில் இனி முதல்வரே துணை வேந்தர் பதவியை ஏற்பதற்கான சட்டத்திருத்தத்தை மேற்கு வங்க அரசு கொண்டு வர உள்ளது.

மாநில பல்கலைகழகங்களில் செயல்பாடுகளில் ஆளுனருக்கு உள்ள அதிகாரம் குறித்து கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சைகளும், விவாதங்களும் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தில் பல்கலைகழக விவகாரங்களில் ஆளுனரின் முடிவுகள் பிரச்சினையை ஏற்படுத்துவதாக தமிழக அரசு கண்டனம் தெரிவித்து வந்தது.

இதனால் பல்கலைகழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்ததையும் தமிழக அரசு கொண்டு வந்தது.

இந்நிலையில் இதுபோன்று தற்போது மேற்கு வங்கத்தில் மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைகழகங்களில் ஆளுனருக்கு பதில் இனி முதல்வரே துணை வேந்தராக இருக்கும் வகையில் விரைவில் புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில அமைச்சர் ப்ரத்யா பாசு தெரிவித்துள்ளார்.