வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 மே 2022 (14:28 IST)

ஆர்.எஸ்.எஸ்-ன் கோர முகம் ஆளுநர் ரவி: நடிகர் கருணாஸ்

karunas
ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோர முகம் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி என நடிகர் கருணாஸ் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிபாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய தெரிவித்த கருத்துக்கு பல அரசியல்வாதிகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்தனர் என்பதும் ஆர்எஸ்எஸின் கருத்தையே ஆளுநர் பிரதிபலிப்பதாக கூறினார்கள் என்பதையும் பார்த்தோம்
 
 இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆர்எஸ்எஸின் கோரமுகம் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி என்றும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு வெளிப்படையாக இயங்குகிறது என்றும் ஆனால் ஆளுநர் வெளிப்படையாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது