ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:47 IST)

மன்னிப்பு கடிதம் எழுதிய சுதந்திர வீரர்?? – சாவர்க்கர் குறித்த கேள்வியால் கொதித்த பாஜக!

மேற்கு வங்க அரசு பணி தேர்வில் சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி இடம்பெற்றுள்ளது பாஜகவினரைடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் திரினாமூல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் ஆளும் மம்தா பானர்ஜி அரசுக்கும், பாஜகவுக்குமிடையே தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது மேற்கு வங்க அரசு பணிகளுக்கான தேர்வில் “சிறையிலிருந்தபோது மன்னிப்பு கடிதம் எழுதிய சுதந்திர வீரர் யார்?” என்ற கேள்வியை அமைத்து அதற்கு சாவர்க்கர் உள்ளிட்ட நான்கு தேர்தெடுப்பு ஆப்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாஜக மீதான சொந்த வன்மத்தின் பேரில் அரசு வினாத்தாள்களில் இவ்வாறான கேள்விகளை இடம்பெற செய்வதாக மேற்கு வங்க பாஜகவினர், மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் திரினாமூல் காங்கிரஸினரோ தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஏதுமில்லை என்றும் வரலாற்றி நடந்த நிகழ்வே கேள்வியாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறி வருகிறார்களாம்