வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (15:48 IST)

4 மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக வென்றதை அடுத்து அந்த நான்கு எம்எல்ஏக்களை பெற்று தந்த மாவட்ட செயலாளர்களுக்கு இன்னோவா கார் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏக்கள் பெற்றுத்தந்த 4 மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசை மத்திய இணை அமைச்சர் முருகன் வழங்கினார். சென்னை கமலாலயத்தில் நடந்த விழாவில் கோவை மாவட்ட செயலாளர் நந்தகுமார், நெல்லை மாவட்ட செயலாளர் மகாராஜன், ஈரோடு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தர்மராஜன் ஆகியோர்களுக்கு இன்னோவா கார் பரிசளித்தார்.
 
இதேபோல் வரும் தேர்தலில் பாஜக எம்எல்ஏக்கள் வெற்றிபெற வைக்கும் மாவட்ட செயலாளர்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.