செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (15:41 IST)

வீணாக செல்லும் தண்ணீரை அடைக்க முயன்ற குரங்கு.. நெகிழவைக்கும் வீடியோ

குழாயிலிருந்து வீணாக செல்லும் தண்ணீரை ஒரு குரங்கு அடைக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தண்ணீர் வீணாகி கொண்டு செல்லும் குழாயை ஒரு குரங்கு, அங்கிருந்து காய்ந்த இலைகளை எடுத்து அடைக்க முயற்சிக்கிறது. ஆனால் அந்த குரங்கால் முடியவில்லை.

நாம் தண்ணீரின் அருமை புரியாமல் அனுதினமும் பல லிட்டர் தண்ணீரை வீணாக்கிக் கொண்டு இருக்கிறோம். இதன் விளைவாக தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் ஒரு ஐந்தறிவு குரங்கு, தண்ணீர் வீணாவதை அறிந்து, குழாயை அடைக்க முயன்ற சம்பவம், நம்மை சிந்திக்கவைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.