புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (15:44 IST)

எருமைகள் மோதியதில் கண்டமான வந்தே பாரத் என்ஜின் முன்பகுதி!

Vandhe Bharat
சமீபத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக வந்தே பாரத் ரயிலின் என்ஜின் பகுதி காட்டெருமை மீது மோதியதில் சேதமடைந்துள்ளது.

முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவிரைவு வந்தே பாரத் ரயில்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில்கள் ரயில்வே துறைக்கு அளிக்கப்பட்டு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்று மும்பை செண்ட்ரலில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 11.15 மணியளவில் இந்த ரயில் வத்வா ரயில் நிலையத்திற்கும், மனிநகர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது எருமைகள் தண்டவாளத்தில் குறுக்கிட்டதால் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. ஆனால் இந்த விபத்தால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பழுதடைந்த எஞ்சின் பகுதியை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By: Prasanth.K