வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 28 மே 2022 (15:57 IST)

ஓடும் ரயில் சாகசம் செய்த மாணவர் பலி....பரவலாகும் வீடியோ

student rail
சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் இரண்டு நாட்களுக்கு முன் ரயில் விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த ஒரத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்செ  நீதிதேவன். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் இரண்டு நாட்களுக்கு முன் ரயில் விபத்தில் உயிரிழந்தார்.

இவர் தன்  நண்பர்களுடன் வேளச்சேரியில் இருந்து, அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் படியில் தொங்கியபடி சென்றபோது, வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கும், செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திற்கும்  இடையே  ரயில் சாகசம் செய்ய முயன்றபோது தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து ரயில்வேதுறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.