இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு! – சாமியார் நரசிங்கானந்த் கைது!
உத்தரகாண்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சாமியார் நரசிங்கானந்த் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த மாதம் தர்ம சன்சாத் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக உறுப்பினர்கள் உட்பட பல இந்து மத தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பேசிய இந்து மத தலைவர்கள் சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது வெறுப்புணர்வு பேச்சை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டித்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் ஜிதேந்திர தியாகி என்பரை ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஆ செய்த சாமியார் யதி நரசிங்கானத்தையும் போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரகாண்ட் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.