ஒரு ஆதார் அட்டையில் ஒன்பது சிம்கார்டா? அதிர்ச்சியில் உறைந்த பெண்
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று வலியுறுத்திய மத்திய அரசு தற்போது அந்த ஆதார் அட்டை எண்ணை அனைத்து ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து ஏர்டெல் சிம்கார்டை உபயோகித்து வரும் ஒரு பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் அலுவலகம் சென்று தன்னுடைய ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்க சென்றார். ஆனால் அவர் கொடுத்த ஆதார் எண்ணுடன் ஏற்கனவே 9 மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் அதிகாரி தெரிவித்தவுடன் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார்.
இதுகுறித்து அந்த பெண் தனது டுவிட்டரில் பதிவு செய்ததோடு, ஆதார் அட்டை எண் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ஏர்டெல் நிறுவனம் தற்போது பதிலளித்துள்ளது. அந்த பெண்ணின் ஆதார் அட்டையில் வேறு மொபைல் எண்கள் இணைக்கப்படவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை