வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 ஏப்ரல் 2018 (18:32 IST)

ஆதார் இணைப்பு முற்றிலும் ரத்தாகுமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்பது மட்டுமின்றி அந்த ஆதார் அட்டையை அனைத்து ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றது. சாதாரணமாக கிடைக்கும் சலுகைகள் கூட ஆதார் அட்டை இல்லாததால் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

நேற்றைய விசாரணைக்கு பின்னர் ஆதார் இணைப்பது உண்மையில் அவசியமா? என்பது தொடர்பாக இன்று காலை 10.30 மணியளவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும்  ஆதார் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வரும் ஜனவரி 17-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.