1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (17:17 IST)

50% மாணவர்களுடன் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி!

50 சதவீத மாணவர்கள் உடன் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்க உத்தரபிரதேச மாநில அரசு சற்றுமுன் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியாவின் முதல் மாநிலமாக பஞ்சாப் மாநிலத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பெற்றோர்களிடம் இருந்து கடிதம் வாங்கி வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை அடுத்து தற்போது உத்தரபிரதேச மாநிலம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க உத்தரவு விடுத்துள்ளது. செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் 50 சதவீத மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் திறக்க உத்தரபிரதேச அரசு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது