1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (14:04 IST)

பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை: புதுவை அமைச்சர் அறிவிப்பு

இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படும் வாய்ப்பு இல்லை என புதுவை கல்வி அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார்
 
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து பள்ளிகளை திறக்கலாம் என திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது அந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதாக தெரிகிறது
 
இந்த நிலையில் புதுவையில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மூன்றாவது அலை வரும் அக்டோபரில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் பின்னர்தான் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார் 
 
புதுவையில் ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
புதுவையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இந்த நேரத்தில் பள்ளிகளை திறந்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும் புதுவை அரசு தெரிவித்துள்ளது