1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 31 ஜூலை 2021 (15:01 IST)

பள்ளிகள் திறக்கும் முதல் மாநிலம் எது தெரியுமா??

பஞ்சாப் மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.  
 
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளை முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது பஞ்சாப் மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே பள்ளிகளை திறக்கும் முதல் மாநிலமாக பஞ்சாப் ஆகியுள்ளது.