12ஆம் வகுப்பு விருப்பத்தேர்வு: நாளை ஹால்டிக்கெட் வெளியீடு
12ஆம் வகுப்பு விருப்பத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சமீபத்தில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில் இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விருப்பதேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டது
ஆகஸ்ட் 6 முதல் 19 வரை தேர்வு நடைபெறும் என்றும் ஜூலை 27 வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விருப்பத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் நாளை முதல் வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது
தேர்வுத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விருப்பத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது