திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2022 (18:47 IST)

மனைவியின் ஒப்புதலுடன் 2வது திருமணம் செய்தவர் தலைமறைவு! என்ன ஆச்சு?

tirupathi
மனைவியின் ஒப்புதலோடு இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் திடீரென தலைமறைவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆந்திராவைச் சேர்ந்த விமலா என்பவர் தனது கணவருக்கு அவருடைய முன்னாள் காதலியை திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்தை தான் மனமுவந்து நடத்தி வைப்பதாகவும் அவர் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் மனைவியின் ஒப்புதலுடன் காதலியை திருமணம் செய்துகொண்ட விமலாவின் கணவர் இரண்டு மனைவிகளுடன் ஒருசில நாட்கள் மட்டுமே சந்தோஷமாக வாழ்ந்துள்ளார். 
 
ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இரண்டு மனைவிகள் பின்னர் இரண்டு மனைவிகளும் சேர்ந்து கணவருக்கு டார்ச்சர் கொடுக்க தொடங்கி உள்ளதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் மனைவியின் ஒப்புதலுடன் காதலியை இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் மனைவிகளின் தொல்லை தாங்க முடியாமல் திடீரென தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது இரண்டு மனைவிகளும் தங்கள் கணவர் எங்கே என்று தேடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran