திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (15:12 IST)

48 வயது நபருடன் திருமணம்.. முதலிரவில் எஸ்கேப் ஆன மணப்பெண்!

Bride
42 வயது நபரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த செந்தில் என்ற 48 வயது நபர் மனைவியை இழந்து 12 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தன்னையும் தனது மகனையும் கவனித்துக் கொள்ள மறுமணம் செய்ய முடிவு எடுத்து அவர் ஆன்லைன் மூலம் பெண் தேடினார்
 
அப்போது நாகர்கோவில் அருகே மார்த்தாண்டம் என்ற பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண் அவரை தொடர்பு கொண்டு தான் ஏற்கனவே திருமணம் செய்து கணவரை இழந்தவர் என்றும் தன்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டுள்ளார் 
 
அதன் பிறகு நீண்ட நேரம் போன் மூலம் பேசிய செந்தில் பின்னர் ஒருநாள் அவரை சேலத்துக்கு வரவழைத்து திருமணம் செய்து கொண்டார். முதலிரவை மிகுந்த ஆசையுடன் எதிர்கொள்ள செந்தில் அறைக்கு சென்ற போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி கவிதா படுத்துக்கொண்டார்
 
இதன் பின்னர் காலை செந்தில் விழித்து பார்த்தபோது அவரது பீரோவில் இருந்த பணம் நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது, கவிதா எஸ்கேப் ஆனதும் தெரியவந்தது. இதனை அடுத்து செந்தில் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில் அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.