ஞாயிறு, 4 டிசம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified புதன், 28 செப்டம்பர் 2022 (08:48 IST)

ஒரே பாலின திருமணத்திற்கு வாக்கெடுப்பு! – முடிவை கண்டு மதத்தலைவர்கள் அதிர்ச்சி!

LGBTQ
க்யூபாவில் ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதிக்கலாமா என்று நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் சமீபகாலத்தில் தன்பாலின காதல், திருமணம் உள்ளிட்டவை குறித்த கேள்விகள் பல எழுந்துள்ளன. இளைஞர்கள் பலரும் LGBTQ+ ஐ ஆதரிக்கும் நிலையில் அதற்கான சட்டங்கள் இல்லாத நாடுகள் இதை எப்படி முறைப்படுத்துவது என குழம்பியுள்ளன.

க்யூபாவில் ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்வது, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அனுமதிப்பது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு “குடும்ப சட்டம்” கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்திற்கு மதத்தலைவர்கள் உள்ளிட்ட சிலரிடம் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனால் ஒரே பாலின திருமணம் மற்றும் குழந்தை தத்தெடுப்பு உள்ளிட்டவற்றை சட்டமாக அமல்படுத்துவது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 66.9% மக்கள் ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவாகவும், 33% பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். இதனால் ஒரே பாலின திருமணம் மற்றும் குழந்தை தத்தெடுப்பு சட்டங்கள் அமலாவதால் LGBTQ+ மக்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.