கணவனுக்கு காதலித்த பெண்ணையே திருமணம் செய்து வைத்த மனைவி !
தன் கணவனுக்கு காதலித்த பெண்ணையே திருமணம் செய்து வைத்துள்ளார் மனைவி.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் கல்யாண். இவர் பிரபல சமூக ஊடகமான டிக் டாக்கில் விமமலா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளர்.
இதற்கிடையே, அவர், விசாகபட்டினத்தைச் சேர்ந்த நித்ய ஸ்ரீ எனறபெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். தன் முன்னாள் காதலை மறந்து தன் மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், தன் கணவன் முந்தையை காதலை அறிந்து, தன் கணவனின் விட்டுப் போன காதலுக்கு மரியாதை கொடுக்க நினைத்த நித்ய ஸ்ரீ,தன் கணவரின் காதலியை தேடிக் கண்டுபிடித்டு, விமலாஐ அவருக்குத் திருமணம் செய்து வைத்து, இனிமேல் 3 பேரும் ஒன்றாக வாழ்க்கை நடத்த வேண்டுமென்ற் ஒரு ஓப்பந்தந்தையும் எழுதி வாங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கணவருக்கும் அவரது காதலிக்கும் திருமணம் செய்து வைத்தபோது, மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.