மாடுகள் மீது மோதியதால் தடம் புரண்ட பயணிகள் ரயில்.. கேரளாவில் பரபரப்பு..!
கேரளாவில் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மாடுகள் மீது மோதியதால் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த போது ரயில் தண்டவாளத்தில் சில கால்நடைகள் இருந்தன. இதனை அடுத்து ரயில் டிரைவர் ரயிலை நிறுத்த முயன்ற போதிலும் கால்நடைகள் மீது ரயில் மோதியது. இதனால் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டது.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போது ரயில் தடம் புரண்டதில் உயிரிழப்பு மற்றும் காயம் எதுவும் இல்லை என்றும் தெரியவந்தது
இதனை அடுத்து அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய ரயில்கள் நேரம் மாற்றியமைக்கப்பட்டதாகவும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் தடம் புரண்ட ரயிலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தடம் புரண்ட ரயில் மீண்டும் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மாடுகள் மீது மோதியதால் ரயில் தடம் புரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Edited by Siva