ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!
அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்தார். இதனைத் தொடர்ந்து, சிறை வாசலில் இருந்து அவர் தனது ஆதரவாளர்களுக்கு ஆசி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், மகாவிஷ்ணு மன்னிப்பு கூறியதை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து, சற்றுமுன் புழல் சிறையில் இருந்து அவர் வெளியே வந்த நிலையில், சிறை வாசலில் மகாவிஷ்ணுவின் ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்து, பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.
மேலும், சிறை வாசலில் வைத்து, அவர் தனது ஆதரவாளர்களுக்கு ஆசி வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Edited by Mahendran