திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 5 அக்டோபர் 2024 (15:01 IST)

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

indigo
நாடு முழுவதும் திடீரென இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கு உள்ளாகியதாக கூறப்படுவதை அடுத்து, பயணிகள் அவஸ்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதளத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும் பயணிகள் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் சரி செய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் இண்டிகோ நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.  மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றும் இண்டிகோ விமான நிறுவனம் கூறியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறால், இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதளம் செயல்படவில்லை என்பதால், பயணிகள் கடும் அவஸ்தை அடைந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இன்னும் சில மணி நேரங்களில் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Edited by Mahendran