வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2020 (08:30 IST)

ஏப்ரல் 20 முதல் மீண்டும் சுங்கக் கட்டணம்! மோட்டார் வாகன காங்கிரஸ் அதிருப்தி!

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிஜ்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அதனால் அவற்றுக்கு இப்போது வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப் படவில்லை.

இந்நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட இருக்கும் நிலையில் மீண்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. நிதிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் செல்லும் வாகனங்கள் மட்டுமே தற்போது சென்று கொண்டிருப்பதால் அவற்றுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பது சரியல்ல என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.