ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (20:21 IST)

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

Laddu
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலந்திருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. 

சந்திரபாபு நாயுடு தனது கருத்துகளால் திருப்பதி கோயிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் காயப்படுத்தி உள்ளார் என்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி கூறியிருந்தார். இதனையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. 

இந்த ஆய்வறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் வெங்கட்ராமனா ரெட்டி  லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், மீன் எண்ணெய், சோயா பீன்ஸ், சூரியகாந்தி எண்ணெய், போன்றவைகளுடன் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பது உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார்.