திருப்பதி லட்டு சுவை குறைந்துவிட்டதா? குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த தேவஸ்தானம்..!
திருப்பதி லட்டுவின் சுவை குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக திருப்பதி லட்டுவின் சுவை குறையாமல் இருப்பதுதான் அதன் தனித்தன்மை என்ற பக்தர்கள் கருதி வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக திருப்பதி லட்டு சுவை குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள தேவஸ்தானம் திருப்பதி லட்டு பிரசாதத்தின் சுவையும் தரமும் குறைவதற்கான வாய்ப்பே கிடையாது என்றும் தரமான முந்திரி மற்றும் திராட்சை கடலை மாவு பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறியுள்ளது.
ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் ஒரு பார்முலாவின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து லட்டு தயாரிக்கப்படுகிறது என்றும் திருப்பதி லட்டுவின் சுவை குறைய வாய்ப்பே இல்லை என்றும் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
Edited by Mahendran