வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (19:23 IST)

திருப்பதி லட்டு, புடவைகள் எடுத்து செல்ல தடை.. சென்னை விமான நிலைய அதிகாரிகள் தடை..!

சென்னை விமான நிலையத்தில் இருந்து  வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் திருப்பதி லட்டு, லுங்கி, புடவைகள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல தடை என சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள்  கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்கள் ஆகவே சென்னையில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  லுங்கி புடவைகள் வாங்கிச் செல்வதாக கூறி கொண்டு அதில் தங்கம் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்  சென்னை விமான நிலையத்தில் இருந்து தீபாவளி இனிப்புகள், திருப்பதி லட்டு, லுங்கி, புடவைகள் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு பயணிகள் எடுத்துச் செல்ல சுங்கத்துறை அதிகாரிகள்  திடீர் தடை விதித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்திலும் இப்படி ஒரு கட்டுப்பாடு இல்லாத நிலையில் சென்னையில் மட்டும் எப்படி திடீர் கடைபிடி செய்வதாக பிற நகரங்களில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran