ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (20:14 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

Selvaperundagai
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளதாகவும், அவரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை 5ம் தேதி மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்த கொலை வழக்கில் தற்போது வரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கிய ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். 
 
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, அருள், சந்தோஷ் ராமு உள்ளிட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் குற்றம் சாட்சி வருகின்றனர்
 
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளதாகவும், அவரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதி உள்ளார்.

 
காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் கட்சியில் இருந்து நிக்க வேண்டும் என்றும் செல்வப்பெருந்தகையை நீக்கினால் தான் மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து நிற்கும் என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.