லட்டுக்கு குவியும் கூட்டம்.. கூடுதலாக 30 கவுண்ட்டர்! – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதியில் லட்டு பிரசாதம் வாங்க கூட்டம் அதிகரித்த காரணத்தால் மேலும் 30 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். கொரோனாவிற்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தினம்தோறும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சிறப்பு தரிசனம், இலவச தரிசன டிக்கெட்டுகள் மூலம் ஒரு நாளைக்கு 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஏழுமலையான் தரிசனம் செய்து வரும் நிலையில் அவர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க 50 கவுண்ட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் பக்தர்கள் கூட்டத்தால் 50 கவுண்ட்டர்களிலுமே மக்கள் கூட்டமாக முந்தியடிக்கும் நிலை தொடர்கிறது.
அதனால் பக்தர்கள் எளிதில், கூட்ட நெரிசலின்றி லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக மேலும் கூடுதலாக 30 கவுண்ட்டர்கள் அமைத்து மொத்தம் 80 கவுண்ட்டர்கள் மூலமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அறிவித்துள்ளார்.
Edit By Prasanth.K