1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (18:25 IST)

இன்று முதல் ரூ.300 தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

tirupathi
இன்று முதல் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 
 
ஒவ்வொரு மாதமும் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஜனவரி 12 முதல் 31-ஆம் தேதி வரையிலான ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணி முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனையடுத்து இணையதளத்தில் பக்தர்கள் விறுவிறுப்பாக 300 ரூபாய் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்துவருகின்றனர்.
 
Edited by Mahendran