செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2023 (14:53 IST)

ஜனவரி 12-30 ரூ.300 தரிசன டிக்கெட் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

tirupathi
ஜனவரி 12ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலான ரூபாய் 300 தரிசன டிக்கெட் வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
 
 திருமலை ஏழுமலையான் தரிசனம் காண ஜனவரி 12 முதல் 31-ஆம் தேதி வரையிலான ரூபாய் 300 விரைவு தரிசன டிக்கெட் ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது நாளை முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ரூபாய் 300 தரிசன டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பக்தர்கள் இணையதளம் மூலமாக ஜனவரி 12 முதல் 31-ஆம் தேதிக்குள் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva