வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 22 ஜூன் 2024 (17:01 IST)

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

Girl
பெங்களுரூவில் சோப்பு வழுக்கி மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
 
கர்நாடக மநிலம் பெங்களூரு கனகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபாய். கடந்த ஜூன் 19ஆம் தேதி கணவருடன் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த சோப்பின் மீது கால் வைத்தார்.
 
சோப்பின் மீது கால் வைத்த வேகத்தில் வழுக்கி மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழப் போனார். இதைக் கண்டு துரிதமாக செயல்பட்ட அவரது கணவர் ஓடிச் சென்று ரூபாயின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். இருப்பினும், சில விநாடிகளே அவரால் தனது மனைவியை தாங்கிக் கொள்ள முடிந்தது.
 
கண் இமைக்கும் நேரத்தில் இந்த பெண், அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட கணவர், ஆட்டோ மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


முன்னதாக நிலை தடுமாறி மூன்றாவது மாடியில் இருந்து ரூபாய் கீழே விழுவதையும் அவரது கணவர் தாங்கிப் பிடிப்பதையும் அருகில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.