தொடர்புடைய செய்திகள்
- முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்..! கள்ளச்சாரய விவகாரத்தில் இபிஎஸ் வலியுறுத்தல்..!!
- பரபரப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராய பலி விவகாரம்.. கள்ளக்குறிச்சி விரைகிறார் ஈபிஎஸ்..!
- நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய எஸ். ஜே. சூர்யா!
- கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசு: ஈபிஎஸ் கண்டனம்..!
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு .. அரசுக்கு உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!
துப்பாக்கி முனையில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ; அதிர்ச்சி சம்பவம்!
தெலுங்கானா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் பெண் காவலரை எஸ்ஐ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காளேஸ்வரம் என்ற காவல் நிலையத்தில் பவானிசென் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணிபுரிந்தார். அவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் தலைமை காவலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துப்பாக்கி முனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுவதோடு இதை வெளியில் கூறினால் கடுமையாக விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்ததாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து பவானிசென் குற்றம் உறுதியானதால் அவர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அவர் மூன்று பெண் காவலர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் இருந்த நிலையில் தற்போது அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
