திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (12:59 IST)

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் 2ஜி வழக்கு..! ஆ.ராசா - கனிமொழிக்கு நெருக்கடி..!!

2g Case
2ஜி முறைகேடு வழக்கு தொடர்பான சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
2ஜி வழக்கில் கனிமொழி,  ஆ.ராசா உள்ளிட்ட 14  பேரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.  
 
இதற்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு அனுமதி மனுக்களை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார்.
 
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி,  இந்த மனு மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 14-ந் தேதி தள்ளி வைத்தார். இந்த நிலையில், 2ஜி வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீடு அனுமதி மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று வெளியிட்டது.

 
இந்நிலையில், 2ஜி வழக்கில் சி.பி.ஐ மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், விசாரணை மே மாதத்தில் இருந்து தொடங்கும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.