1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2023 (18:20 IST)

வாச்சாத்தி வழக்கு: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்குகளில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
வாச்சாத்தி வழக்கில்  நான்கு ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டு சிறை ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்றம்  உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் தண்டிக்கப்பட்ட முதன்மை குற்றவாளியான IFS அதிகாரி நாதன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
 
இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி கே.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் குற்றவாளிகள் 6 மாதத்திற்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
Edited by Siva