விபரீதம் தெரியாமல் சாலையோரத்தில் உறக்கம்! நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்! – குஜராத்தில் சோக சம்பவம்!

accident
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:49 IST)
குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் உறங்கியவர்கள் மீது லாரி மோதி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றின் ஓரமாக அப்பகுதியில் தினக்கூலிக்கு வேலை செய்யும் சிலர் படுத்து உறங்கி இருந்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் அவ்வழியாக சென்ற சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தொழிலாளிகள் உறங்கி கொண்டிருந்த சாலையோரம் திரும்பியது.

இதை சற்றும் எதிர்பாராத கூலி தொழிலாளிகள் லாரி மோதியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :