வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (12:42 IST)

புக்கிங் செய்து 3 மணி நேரத்தில் கேஸ் டெலிவரி! – இந்தியன் ஆயில் முடிவு!

இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்த சில மணி நேரங்களில் டெலிவரி செய்யும் தட்கல் முறையை அறிமுகப்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்தியா முழுவதும் வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ள நிலையில் கேஸ் சிலிண்டர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. தற்போது கேஸ் சிலிண்டர்கள் தீர்ந்து போனால் போன் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ உடனடியாக புக்கிங் செய்து கொள்ள வசதிகள் இருந்தாலும் புக்கிங் செய்யப்பட்டு கேஸ் சிலிண்டர் வீட்டிற்கு டெலிவரி ஆக அதிகபட்சம் இரண்டு நாட்களாவது பிடிக்கிறது.

இதனால் ஏற்படும் சிரமங்களை குறைக்க புக்கிங் செய்த உடனே கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய தட்கல் முறையை இந்தியன் ஆயில் ஏற்படுத்துவதாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் தட்கல் எல்பிஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில் இதன்மூலம் தட்கல் புக்கிங் செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் புக்கிங் செய்து 3 முதல் 6 மணி நேரத்திற்குள்ளாக கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.