கோவா சுற்றுலா சென்ற 15 பள்ளிகால தோழிகள்: விபத்தில் பரிதாபமாக பலியான 10 பெண்கள்!

கோவா சுற்றுலா சென்ற 15 பள்ளிகால தோழிகள்
siva| Last Updated: ஞாயிறு, 17 ஜனவரி 2021 (11:16 IST)
கோவா சுற்றுலா சென்ற 15 பள்ளிகால தோழிகள்
15 பள்ளி கால தோழிகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒன்று சேர்ந்து கோவா சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 15 பெண்கள் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் அனைவரும் நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்ததால் கோவாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்

இதனையடுத்து அவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வேன் மூலம் கோவா சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வேனில் ஜாலியாக பாட்டுப்பாடி ஆட்டம் போட்டுக் கொண்டு சென்றதாகவும் மொத்தமாக செல்பி எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் 15 பெண்கள் சென்ற வேன் ஹூப்ளி அருகே சென்றபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 தோழிகள் பரிதாபமாக பலியானார்கள். மேலும் ஓட்டுநரும் பலியானதால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி மீதி உள்ள ஐந்து பெண்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த பதினைந்து பள்ளிகால தோழிகளும் தற்போது டாக்டர்களாகவும் மருத்துவத் துறையிலும்
உயர் அதிகாரிகளாகவும் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 15 பள்ளி தோழிகள் ஒன்றிணைந்து சந்தோசமாக சுற்றுலா சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :