செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (15:27 IST)

ஆன்லைனில் மது விற்பனை செய்ய அறிவுறுத்தல்! – வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

மதுக்கடைகள் திறக்கப்பட்டதால சமூக இடைவெளி பின்பற்றப்படாதது குறித்து தொடரபட்ட வழக்கில் ஆன்லைன் விற்பனை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மே 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்கள் கழித்து மதுபானக்கடைகள் திறக்கப்படுவதால் மதுப்பிரியர்கள் கூட்டம் கூட்டமாக மதுபானக்கடைகளுக்கு முன்னர் குவிந்து வருகின்றனர். இதனால் சமூக இடைவெளி கேள்விக்கு உள்ளாகியுள்ளதாக பலர் கூறிவந்த நிலையில் இதுகுறுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்திய நீதிபதிகள் மாநில அரசுகள் மது விற்பனையை நேரடியாக கடைகள் மூலமாக மேற்கொள்ளாமல் மறைமுகமான வழியில், ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் முறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தொடரப்பட்ட மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.