1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (14:56 IST)

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி! – சென்னையில் நடந்த விபரீதம்!

சென்னையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதாக புரொடக்‌ஷன் மேனேஜர் செய்த விபரீத முயற்சியால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனாவால் ஏராளமான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் அதற்கான மருந்தை கண்டுபிடிக்க பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த சிவநேசன் என்பவர் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காசிப்பூரில் உள்ள பயோ டெக் நிறுவனம் ஒன்றில் ப்ரொடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றி வரும் இவர் சளி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. இவரும் இவரது நண்பரும் மருத்துவருமான ராஜ்குமார் என்பவரும் இணைந்து மருந்து கண்டுபிடிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் தயாரிக்கப்பட்ட மருந்து கரைசலை சோதித்து பார்ப்பதற்காக தானே குடித்துள்ளார் சிவநேசன். குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவநேசன் உயிரிழந்துள்ளார்.

கொரோனா மருந்து கண்டுபிடிப்பதாக தானே கரைசலை குடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சென்னையி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.