1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 18 பிப்ரவரி 2023 (19:43 IST)

ஓட்டலில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்...அதிகாரிகள் சோதனை

food
கேரளா மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் தனியார் ஓட்டலில் உணவு சாப்பிட்டு, வாந்தி,மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மற்றும் ஆசிரியர்கள் 8 பேர் என அனைவரும் இடுக்கி மாவட்டம் வாகமன் என்ற பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது, அங்குள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்டனர். இதையடுத்து, மாணவர்கள் 6 பேருக்கு வாந்தி, மயக்கம் என உடல நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து கேள்விப்பட்டு, சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்குச் சென்று சோதனை நடத்தினர். அதில், இறந்துபோன புழுக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.