வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (16:36 IST)

வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கி 4 பேர் மயக்கம்!

White House
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கி யதில் 4 பேர் மயங்கி விழுந்தனர்.

அமெரிக்க  நாட்டின் தலை நகர் வாஷிங்டன் வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிக்கைக்கு அருகில் அமைந்துள்ள லேபாயேட் சதுக்கத்தில் உள்ள  ஜாக்சன் சிலையின் முன்பு சிலர் நின்று கொண்டிருந்தனர்.

அங்கு மழை வருவதற்காக சூழல் உருவான நிலையில், திடீரென மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் மயங்கி விழுந்தனர்.

அருகிலுள்ளோர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மின்னல் தாக்கிப் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.