தொடர்புடைய செய்திகள்
- 10 நிமிடத்தில் விற்று தீர்ந்த பொங்கல் சிறப்பு ரயில் டிக்கெட்.. கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?
- பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!
- தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் 280 ரூபாய் உயர்ந்ததால் அதிர்ச்சி..!
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு
- இந்தியாவில் அறிமுகமானது OnePlus 13 மற்றும் OnePlus 13R! - சிறப்பம்சங்கள் என்ன?
இன்றும் தங்கம் விலை உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் பரபரப்பு..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று 25 ரூபாய் அதிகரித்துள்ளது.
இன்னும் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே தங்கத்தின் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தற்போது முதலீடு செய்யலாம் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந்து 7,285 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 200 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய் 58,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,945 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
Edited by Siva
