வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (20:26 IST)

பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட 23 மாணவர்கள் மயக்கம்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், சாக்லேட் சாப்பிட்ட 23 மாணவர்களுக்கு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள  நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சைனாபுரம் என்ற பகுதியில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு  பல மாணவர்கள் படித்து வரும் நிலையில், இன்று 4 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் லோகேஷ் தனது பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

அப்போது, வகுப்பு மாணவர்களுக்கும் அவர் இனிப்புகள் வழங்கினார்.. இந்த நிலையில், அவர் கொடுத்த சாக்லேட் சாப்பிட்ட 23 மாணவர்களுக்கு  மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் அளித்த தகவலின் பேரின் அங்கு வந்த சுகாதாரத்துறை அலுவலர்கள்,  மாணவர்களின் உடல் நிலையைப்  பரிசசோதனை செய்தனர்.

இதில், பிறந்த நாள் கொண்டாடிய மாணவர் கொடுத்த காலாவதியான சாக்லேட்டுகள் சாப்பிட்டதால்தான்  உடல் உபாதை ஏற்பட்டதா? என்று அதிகாரியக்ள் விசாரணை நடத்தி வருகின்றனர்..

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj