வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (17:41 IST)

தொழிற்சாலையில் ரசாயன கசிவு...50 பெண்கள் மயக்கம்

andra
ஆந்திர மாநிலத்தில் ரசாயன கசிவு ஏற்பட்டு 50 பெண்கள் மயக்கம் அடைந்துள்ள சம்ப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஆந்திர மாநிலத்தில்  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான  வை.யெஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஆந்திராவின் விசாககப்பட்டினம் அருகேயுள்ள ஒரு தொழிற்சாலையில்,  ரசாயன வாயு கசிவு ஏற்பட்டு 11 பேர் பலியாகியுள்ளனர். 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது..

ஆந்திர  மாநிலத்தின் அனகா பல்ல  மாவட்டத்தில் உள்ள பிராண்டிக்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஆடை உற்பத்தி பிரிவில்  திடீரென்று எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இதில், அங்கு பணியாற்றிய 50 தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில், பாதிக்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தொழிற்சாலை வளாகத்தில் இருந்து எல்லோரையும் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது