வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:09 IST)

வெடிச்சத்தம் கேட்டு மயங்கி விழுந்த சிறுவன் பலி!

தூத்துக்குடி மாவட்டம் தோப்பூர் என்ற பகுதியில், வெடி சத்தம் கேட்டு மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே  தோப்ப்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சிவபெருமாள்.

இவது மனைவி செல்வக்குமாரி. இந்த தம்பதியர்க்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதில், அஜய்குமார்(10 வயது) அருகில் உள்ள ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அரையாண்டு விடுமுறை உள்ளதால் சிறுவர்கள் விளையாடினர். அப்போது, திடீரென்று வெடிச்சத்தம் கேட்டு, அஜய்குமார் மயங்கி விழுந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.