வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (08:53 IST)

சிவசேனாவுக்கு துணை முதல்வர், 18 அமைச்சர்கள்! பாஜக முடிவு

சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 162 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 145 என்ற எண்ணிக்கையை இரு கட்சிகளும் தனித்து பெறவில்லை
 
எனவே மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியே அமைக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் முதல்வர் பதவி யாருக்கு? எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர் பதவி? போன்ற பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது
 
இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்ட போதிலும் தற்போது ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பாஜகவிற்கு முதலமைச்சர் பதவியும், சிவசேனாவுக்குகு துணை முதலமைச்சர் பதவியும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மகன் துணை முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கபடுகிறது
 
மேலும் சிவசேனா அவருக்கு 13 முதல் 18 அமைச்சர்கள் பதவி வழங்கவும், பாஜகவிற்கு 15 அமைச்சர்கள் பதவி எனவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அரசியல் குழப்பநிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை தேவேந்திர பட்னாஸ் தலைமையிலான அரசு மகாராஷ்டிராவில் பதவியேற்கும் என்று கூறப்படுகிறது