வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (11:39 IST)

முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

suicide
உத்தரப்பிரதேச மாநிலத்தில், முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியில், 25 வயதான கார்த்திகேய ஸ்ரீவத்ஸவா என்ற முதுகலை அறுவை சிகிச்சை பயிற்சி பெற்று வந்த மாணவர் திடீரென விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவர் உத்தரகாண்டில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் மருத்துவம் படிக்க வந்ததாகவும், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மருத்துவமனை அருகே தனது காரில் சென்ற அவர், திரும்பி வரவில்லை. பின்னர், காரை திறந்து பார்த்தபோது, விஷ ஊசி போட்ட நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம், மருத்துவமனை வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva