திங்கள், 9 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (12:01 IST)

56 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண்.. குற்றவாளி மர்ம மரணம்..!

பெங்களூரில் பெண் ஒருவர் 56 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் நபர் மர்ம மரணம் அடைந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 21 ஆம் தேதி இளம் பெண் ஒருவர் பெங்களூரில் தனது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் 56 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மகாலட்சுமி என்ற பெயரை கொண்ட இவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் முக்திராய் என்பவர் தான் கொலை செய்தார் என கூறப்பட்டது. மகாலட்சுமியின் கொலையில் முக்திராய்க்கு தொடர்பு உள்ளது  என சந்தேகம் எழுந்தது.
 
இந்த நிலையில், முக்திராயை பிடித்து விசாரணை செய்வதற்காக போலீசார் முயன்றபோது, அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் தலைமறைவாக இருந்தார், மேலும் அவர் ஒடிசா மாநிலத்துக்கு தப்பி சென்றதாக செய்திகள் வெளிவந்தன.
 
5 பேர் கொண்ட தனிப்படை அவரை தேடித் தேடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், ஒடிசா மாவட்டத்தில் உள்ள சுடுகாட்டில் அவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் முக்தி ராய் இறந்து கிடந்தார்.
 
இதனைத் தொடர்ந்து, அவருடைய வாகனம் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, அதை ஆய்வு செய்ததில் மகாலட்சுமியை கொலை செய்ததை  ஒப்புக்கொண்ட வாக்குமூலக் கடிதங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran